பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்ததாக எழில் தனது காதலை அமிர்தாவிடம் கூறி விடுகிறார். ஆனால் அமிர்தா அவரது காதலை ஏற்றுக் கொள்வாரா? மாட்டாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.