இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி சேவை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையானது சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபேட், குரு கிராம், கவுகாத்தி, பாட்னா, லக்னோ, சிம்லா, இம்பால், அகமதாபாத் மற்றும் காந்திநகர் போன்ற நகரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக சில நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதன்படி அகமதாபாத்தில் எஸ்ஜி ஹைவே, மேம் நகர், செட்டிலைட், நவ்ரங்புரா, சாபர்மதி, மோடேரா, சந்த்கேதா, தெற்கு போபால், கொம்டிப்பூர், மேம்கோ, பப்பு நகர், காந்தி நகரில் உள்ள கோபா, ராசன், சாகசன் பேதப்பூர் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் தொடங்கப் பட்டுள்ளது. இதேபோன்று மணிப்பூரில் இம்பாலின் அகம்பட், வாட் சிமெட்ரி, தேவ்ல்லெண்ட், டாகேல் பட், புதிய செயலாளர் அலுவலகம், பபுரா, நாகரம், காரி, யுரி போர்க், சாகோல்பேண்ட் போன்ற இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஏர்டெல் 5ஜியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிவேக இன்டர்நெட் சேவைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.