Categories
அரசியல் மாநில செய்திகள்

“அப்போ இவருக்கு முன்னாடியே தெரியுமா?”…. வசமாக சிக்கிய பாஜக…. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்து வந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமகிருஷ்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 3-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராஜேந்திர பாலாஜி தான் குற்றமற்றவர் என விரைவில் நிரூபிப்பார் என்று கூறியிருந்தார். அதேபோல் பாஜக நிர்வாகி ஒருவர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்க உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அண்ணாமலைக்கு ராஜேந்திர பாலாஜி எங்கு மறைந்திருந்தார் என்பது ஏற்கனவே தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |