சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதில் தொகுத்து வழங்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் இதுவரை சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர்-1 போன்ற ஹிட்டான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதனையடுத்து, வரும் 19ஆம் தேதி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 தொடங்க இருக்கிறது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை வழக்கமாகப் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருவார்கள்.
அந்த வகையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா இருப்பதால் அவருக்கு பதிலாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தீனா மற்றும் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.