நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த தகவலை ஜிப்ரான் புகைப்படத்துடன் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வேதாளம் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ஆலுமா டோலுமா என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது துணிவு படத்தில் அவர் பாடிய சில்லா சில்லா என்ற பாடலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துணிவு திரைப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக குழுவினர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
https://twitter.com/GhibranOfficial/status/1588531579369902080?s=20&t=h46EsMf4mf_FALSlJ77lrw