தமிழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று தொடங்கியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில் அரசு பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் வழிபாட்டு தலங்கள் நூலகங்கள் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது அவர்கள் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் 50% மக்களுடன் பயணிப்பதிலோ 400 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் பயணிப்பதிலோ எந்த ஒரு பொருளாதார முன்னேற்றமும் அடையப் போவதில்லை. மேலும் மாவட்டம் விட்டு வெளியில் செல்வதற்கு அனுமதித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயங்கும் என பேருந்து உரிமையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களினால் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரில் மட்டும் 297 தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.