இளம்பெண் ஒருவர் தற்கொலைகளை தடுப்பதற்காக சைக்கிளில் நிர்வாணமாக சவாரி செய்துள்ள சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
லண்டனைச் சேர்ந்த இளம்பெண்ணான கெர்கி பார்ன்ஸ் என்பவரின் உறவினர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அந்த மரணம் கெர்கியை மிகவும் பாதித்துள்ளது. பல நாட்கள் அதை நினைத்து அழுதுள்ள அவருக்குப் மனித வாழ்க்கையின் துயரம், துன்பங்கள் இதுதானோ? சுருங்கிய இந்த வாழ்க்கையில் நம்முடைய பங்களிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதன்காரணமாக அவர் தற்கொலைகளை தடுத்து நிறுத்த நினைத்துள்ளார்.
அதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியை நாடலாம் என்று முடிவு செய்துள்ள அவருடைய முயற்சி ஆரம்பத்தில் தோல்வியை கொடுத்துள்ளது. அதனால் வேறு எப்படி பணத்தை திரட்டலாம் என்று யோசிக்கும்போது சைக்கிள் சவாரி பற்றி அவருடைய நண்பர் ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படியே கெர்கி சைக்கிளில் நிர்வாணமாக வலம் வந்து லண்டனை சுற்றி 10 மைல் சைக்கிள் ஒட்டியுள்ளார்.
இதனால் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த சைக்கிள் சவாரியை முன்னெடுத்துள்ளார் கெர்கி. இதுகுறித்து அவர் கூறுகையில், “என் உறவினர் ஒருவர் தற்கொலை செய்து இறந்து போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நான் செய்வது எனக்கு . நான் நிர்வாணமாக சைக்கிளில் சவாரி செய்து இணையத்தில் பதிவிட்டதால் கிடைத்த நிதி உதவியால் கொஞ்சம் தற்கொலைகள் குறைந்தாலும் எனக்கு திருப்தி தான்” என்று கூறியுள்ளார்.