Categories
தேசிய செய்திகள்

இந்துக்களிடம் மன்னிப்பு கேட்ட “பிரஞ்சு பெண்”… ஏன் தெரியுமா..!!

பிரான்ஸ் நாட்டு பெண் தான் எடுத்த நிர்வாண படங்களுக்காகவும், இந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமீபத்தில் பிரான்சை சேர்ந்த 27 வயது இளம் பெண் மேரி ஹெலனி என்பவர், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் நிர்வாண காட்சியோடு நின்றுகொண்டு ஸ்ட்ன்ட் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அந்தப் புகைப்படங்களை எதற்காக எடுத்தேன் என்றும் அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது அந்த பிரெஞ்சு பெண் கங்கை நதிக்கரையில் லட்சுமண் ஜூலா பாலம் மீது ஆடையின்றி ஸ்ட்ன்ட் காட்சிகளை வீடியோவாகவும் படமாகவும் எடுத்துள்ளார்.

அவ்வாறு எடுத்த வீடியோ பதிவை, சமூக ஊடகங்களில் வெளியிட்டு வைரலாக்கியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு விசாரணையின்போது பிரெஞ்சு பெண் அளித்த பதிலில், “பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதால் விழிப்புணர்வுக்காகவும் பெண்கள் தற்காப்புக்காகவும் ஸ்டண்ட் காட்சிகளை படம் பிடித்தேன்” என  அந்தப் பெண் விளக்கம் எடுத்துள்ளார். மேலும் தான் செய்த செயலுக்கும், ரிஷிகேஷில் பக்தர்கள் மனம் புண்படும் படி நடந்துக் கொண்டதற்காகவும் பிரெஞ்சு பெண் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Categories

Tech |