Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க இஷ்டத்துக்கு மாத்துவீங்களா ? கங்குலி மீது காண்டான IPL ரசிகர்கள் …!!

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியின் பரிசுத்தொகையை 50% குறைக்கப்பட்டது ஐபிஎல் கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து ஐபிஎல் அணி அலுவலர் ஒருவர் கூறும்போது , ஐபிஎல் பரிசுத்தொகையை 50 விழுக்காடு குறைப்பது குறித்து எந்த ஒரு அணி உரிமையாளரிடமும் ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரத்தை முதலில் டெல்லி கேப்பிடல் அணி தான் கிளப்பியது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதலாம் என முடிவெடுத்தபோது சென்னை அணியையும் , மும்பை அணியையும் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அனைத்து அணியின் உரிமையாளர்கள் கையெழுத்திட்ட கடிதம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தை நாங்கள் டிவியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்  பரிசு தொகை குறைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |