இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விகிதம் 49 புள்ளி 95 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஆய்வாளர்கள் மருந்தை கண்டுபிடிக்க மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல கொரோனா அறிகுறி குறித்தும் பல்வேறு நாடுகளில் குழப்பமே இருந்து வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பலருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருப்பது பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலும் இதே நிலை தான் நீடிக்கின்றது. இந்த நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.அதில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தூர் விகிதம் 49.95 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 135 பேர் குணமடைந்துள்ளார். வாசனை சுவை தெரியவில்லை எனில் அது ஒரு அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப் போக்கு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.