இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு நிறுவனங்களின் வளர்ச்சி குறைவு, ஊழியர்களின் செயல்பாடுகள் சரி இல்லை, செலவுகள் குறைப்பு போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனமான ஆல்பபெட்டுக்கு தற்போது ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை வந்துள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ளது.
அதன் பிறகு ஆல்பபெட் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். இந்நிலையில் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அல்பாபெட் நிறுவனத்தில் தற்போது அளவுக்கு அதிகமாக பணியாளர்கள் இருப்பதாகவும், நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆல்பபெட் நிறுவனத்தின் இந்த முடிவால் தற்போது ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.