பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது செய்யப்பட்டு இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பேனர் விவகாரத்தில் பள்ளியக்காரனை காவல்நிலையம் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் கொடிகட்டுதல் , பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட பழனி , சுப்பிரமணியன் , சங்கர் , லட்சுமிகாந்த் ஆகிய 4 பேரை இன்று காலை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்ற பின் தற்போது இவர்கள் நான்கு பெரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ஜெயகோபாலுக்கு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.