சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பு விடாமல் குரல்வளை மூலம் உள்ளுக்குள் சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும்.
தேங்காய்ப்பால் மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50 முதல் 100 மில்லி குடித்து வரலாம்.
தேங்காய் பாலில் மாசிக்காய் அல்லது வசம்புத் துண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தொண்டைப்புண் குணமாகும்.
இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி தொண்டையில் மேல் பூசி வரவும் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் குணமாகும்.
2 எலுமிச்சம்பழம் சாற்றுடன் தண்ணீர் கலந்து தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்கவும்.
அதிமதுரம் ,சுக்கு, சித்தரத்தை, இவற்றை பொடி செய்து பாலில் கலந்து சிறிது மஞ்சள்தூள் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வலி குறையும்.
முல்லைப் பூ இதழை நெய்யில் வதக்கி ஒற்றடமிட தொண்டைவலி குறையும்.
மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து அதை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் முற்றிலும் குணமாகும்.
முருங்கை வேர்ப்பட்டை அல்லது எலுமிச்சம் பழச் சாற்றை வெந்நீரில் உப்பு போட்டு கலக்கி தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
வசம்பு துண்டு ஒன்றை வாயில் அடக்கி கொண்டு ஒரு மணி நேரம் அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.
வெந்நீரில் உப்பு போட்டு கலக்கி சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வந்தால் மேற்கூறிய அனைத்து நோய்களும் நீங்கும்.