வயிற்றில் வலி வந்தால் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு அவஸ்தையை உண்டாக்கும் .எனவே அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நமது உடல் உறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாய் உள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கேன சேர்ந்த இடம் வயிறு இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது
அந்தப் பத்து என்று சொல்லப்படுவது. மானம், கல்வி, வன்மை, அறிவு, தானம் , முயற்சி ,காமம் ,குலம், தாவாண்மை , தேன்கசி, போன்றவையாகும.
1. கொதிக்கும் நீர்ஒரு டம்ளரில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு நன்றாக கலக்கி குடிக்கலாம்.
2. முருங்கைச் சாறு இரண்டு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை பருக வயிற்று வலி குணமாகும்.
3. 200 மில்லி நீரில் பத்து கிராம் கிராம்பை நசுக்கி போட்டு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிடவும் இவ்வாறு செய்தால் வயிற்று வலி நொடியில் குணமாகும் அருகம்புல் வேப்பிலை சம அளவு எடுத்து கசாயம் வைத்து தினமும் அரை டம்ளர் என மூன்று நாட்கள் அருந்த வயிற்றுவலி குணமாகும்.