Categories
லைப் ஸ்டைல்

பழம் & காய்கறித் தோலை தூக்கி எரியுறீங்களா…? இனி வேண்டாம்…. இப்படி செஞ்சி பாருங்க…!!

காய்கறி மற்றும் பழங்களின் தோலை தூக்கி எறியாமல் என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில் அவற்றின் தோல்களும் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது என்பது பலரும் அறியாத செய்தி. ஆகவே இதுவரை பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை தூக்கி வீசி எறிந்து இருந்தால் இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். இப்பொது என்னென்ன பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை சுவையான உணவுகளை சமைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

பீர்க்கங்காய் தோல்:

பீர்க்கங்காய் தோலிருந்து பஜ்ஜி அல்லது பக்கோடா செய்து பாருங்கள். எப்போதும் போல கடலை மாவை பயன்படுத்தி செய்யுங்கள். இது மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஆரஞ்சு பழத்தோல் :

ஆரஞ்சு தோல்களை பயன்படுத்தி இனிப்பான ஆரஞ்சு மிட்டாய் செய்யலாம். ஏதாவது ஒரு பழச்சாறு அல்லது காய்கறிசாறில் ஆரஞ்சு பழத் தோல்களை சேர்த்துக் கொண்டு அவற்றோடு இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும்., வெந்தவுடன் அதை வடிகட்டி தோலை வெளியே எடுத்துவிட்டு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கொண்டு இந்த கலவை கெட்டியாக வரும் வரை கலக்க வேண்டும்.

இப்போது இந்த கலவையில் ஏற்கனவே தனியாக வைத்திருந்த ஆரஞ்சு பழத் தோல்களை சேர்ந்த சுமார் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் இதை நன்றாக காய வைக்கவேண்டும். இப்போது சுவையான ஆரஞ்சு மிட்டாய் தயாராகிவிடும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோல்:

சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலை எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும். இந்த கலவையை பேக்கிங் ஷீட்டில் வைத்து அது நன்றாக வெந்து சிப்ஸாக மாறும் அளவிற்கு 22 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். சிறிய பாத்திரத்தில் பூண்டு பொடி, கருப்பு மிளகு, சிவப்பு மிளகு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இந்த கலவையை கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Categories

Tech |