ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தகவல் திருடப்படுவதாக ஒரு எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பலரும் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
உங்கள் KYC இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், 24 மணி நேரத்தில் சிம் பிளாக் ஆகி விடும் என்றும் மீண்டும் ஆக்டிவேட் செய்ய ஒரு நம்பர் அழையுங்கள் என்று மெசேஜ் வருவதாகவும் இதன் மூலம் வாங்கி தகவல்கள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.