Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யணுமா….? அப்போ IRCTC-யின் புதிய விதிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை தான் அதிக அளவில் விரும்புவார்கள். ஏனெனில் பேருந்து உள்ளிட்ட மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் செல்பவர்கள் பெரும்பாலும் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கிறார்கள். இப்படி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி சில முக்கிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் கண்டிப்பாக இந்த விதிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் முதலில் உங்கள் இமெயில் ஐடியை வெரிஃபை செய்ய வேண்டும். இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் வெரிஃபை இல்லாமல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாது. இதனையடுத்து தற்போது ஆன்லைனில் எப்படி வெரிஃபை செய்து கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முதலில் ஐஆர்சிடிசி யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடியை உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன்பிறகு வெரிஃபை ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். இந்த ஓடிபி நம்பரை அதில் பதிவு செய்த பிறகு இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை மீண்டும் ஒருமுறை செக் பண்ண வேண்டும். இதனை எடுத்து உங்களுடைய மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் வெரிஃபை ஆகிவிடும்.

மேலும் உங்கள் கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்துக் கொண்டால் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு நபர் தன்னுடைய மெயில் ஐடியை பயன்படுத்தி 24 டிக்கெட்டுகளை ஒரு மாதத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பாக 12 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆனால் தற்போது 24 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

Categories

Tech |