Categories
தேசிய செய்திகள்

உங்க Votter Id-இல் திருத்தம் செய்யணுமா…? 5 நிமிடங்கள் போதும்…. வீட்டிலிருந்தே பண்ணலாம்…!!

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வாக்காளர் அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஓட்டு போட தகுதியுடையவர்கள் அடையாள அத்தியாகும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? ஏதேனும் திருத்தம் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எதற்கும் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே மிக சுலபமாக திருத்தம் செய்யலாம். இதற்கு செலவு எதுவும் செய்யத் தேவை இல்லை. உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டால் கம்ப்யூட்டரிலேயே செய்து கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

ஆன்லைனில் திருத்தம் செய்வது எப்படி?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://www.nvsp.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு  செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் Login / Register என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். முதல் முறை பயனாளராக இருந்தால் Register as New user என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களது செல்போன் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிடவும்.

send OTP என்பதை கிளிக் செய்தால் அதில் உங்களது செல்போன் நம்பருக்கு ஒரு OTP நம்பர் வரும். அதைப் பதிவிட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு password உருவாக்கவும்.

இப்போது உங்களது account கிரியேட் ஆகிவிட்டது. உடனே லாகின் செய்து Correction in Personal Details என்பதை கிளிக் செய்யவும்.

அதில் உங்களுடைய மாநிலம், மாவட்டம், தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்றவற்றை அப்டேட் செய்யலாம். இதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு ரெஃபரன்ஸ் எண் வழங்கப்படும். அதை வைத்து கோரிக்கை நிலையை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம்.

Categories

Tech |