துணிகளில் படிந்த கறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ.
கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்:
ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். எண்ணெய் இருபுறமும் அழுந்தாமல் துடைத்து எடுக்கவும்.
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கறைகளை எடுக்கலாம். இதை துணிகளை மிஷின் உள்ளே போடுவதற்கு முன்பு உபயோகிக்கவேண்டும். பேக்கிங் சோடாவை கரை படிந்த துணிகளில் தடவி 24 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். ஒரு நாள் முழுக்க கரை மீது வினிகரை தெளித்து தெளித்து விடவும். பின்பு மென்மையான சோப்பு கொண்டு துடைத்து எடுக்கவும். கறை நீங்கி துணி பளபளக்கும்.
சாக் பீஸ்:
துணிகளில் முதலில் எண்ணெய் கறையை துணியால் துடைத்து எடுத்துவிட்டு குழந்தைகள் பயன்படுத்தும் வெள்ளை சாக்பீஸ் எடுத்துக்கொண்டு கறையில் சில வினாடிகள் தேய்த்தால் கறைகள் மறையும். இதற்கு பதிலாக பதிலாக சுண்ணாம்பு இருந்தால் பயன்படுத்தலாம். பின்னர் சோப்பு போட்டு துணியை துவைக்கவும்.
பேபி பவுடர்:
கறை இருந்த இடத்தை துடைத்து விட்டு விட்டு அதில், பேபி பவுடர் எடுத்து கறையின் மீது சில நிமிடங்கள் போட்டால் அதன்மீது ஒட்டிக்கொள்ளும். பின்னர் சிறிது நேரம் கழித்து கைகளால் உருட்டி அழுக்குகளோடு பவுடர் வெளியே வரும். இதுவரை இல்லாத அளவுக்கு துணி பளிச்சிடும்.
டூத் பேஸ்ட்:
டூத் பேஸ்ட் ஆடையில் உள்ள கறைகளை நீக்க உதவும். முதலில் துணியில் கறை படிந்த இடத்தில் தடவி விடவும். பிறகு வெந்நீரை மெதுவாக துணி மீதுள்ள டூத் பேஸ்ட் மீது ஊற்றவும். உயரமாக கரை மீது படும்படி சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் கறை கரைந்து வெளிவரும்.
வினிகர்:
வினிகரை வைத்து கறையை வெளியேற்றிவிடலாம். சம அளவு தண்ணீர் எடுத்து அதனுடன் வினிகரை கலந்து தடவினால் துணியில் கறை நீங்கி விடும்.