பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வை மாணவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
எனவே மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களின் பேர்பாமன்ஸ் அடிப்படையிலும் இறுதியாண்டு தேர்வில் அவர்களை தேர்ச்சியை வைக்கும் நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம். இந்த முறையை ஏற்றுக் கொள்வதை மாணவர்களை முடிவு செய்து கொள்ளலாம். புதிதாக வகுப்புகளை தொடங்க கூடிய நிகழ்வை அக்டோபருக்கு பிறகு வைத்துக்கொள்ளலாம். அதற்கு முன்பாக அதனை தயவுசெய்து மேற்கொள்ளாதீர்கள், அது பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும் என்று நிபுணர் குழுவானது தனது பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள்.
எனவே இந்த குழுவின் பரிந்துரையை அரசு ஏற்று கொள்ளும் பட்சத்தில் பல்கலைக் கழகங்களுக்கான அறிவுறுத்தல் கொடுக்கும் பட்சத்தில் அக்டோபர் மாதம் வரை எந்த ஒரு பல்கலைக் கழகங்களும் இயங்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது அதே வேளையில் இறுதி ஆண்டில் தேர்வு இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி அடையக்கூடிய வாய்ப்பும் இந்த ஆண்டு உருவாகியிருக்கிறது பல்கலைக்கழகங்களுக்கு இந்த நிலைமை வருகிறது என்றால் நிச்சயமாக அந்த பல்கலைக்கழகங்கள் செயல்படக்கூடிய கல்லூரிகள்
இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்ற முறையை மாணவர்களிடம் விட்டுவிடுவது என்பது, முந்தைய ஆண்டுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதித்தேர்வை ஏற்றுக் கொள்கிறேன் என்றால் தேர்ச்சி பெற்றுவிடலாம். அல்லது அதில் எனக்கு உடன்பாடு இல்லை நான் தேர்வு எழுதினால் இன்னும் அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று ஒருவேளை மாணவர்கள் தெரிவித்தால் அவர்களுக்கு ஊரடங்கு நிறைவடைந்த பிறகு தேர்வு தேதி அறிவிக்கப்படும், அந்த தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்று கொள்ளலாம். எனவே முழுக்க முழுக்க மாணவர்களது முடிவுகளில் விட்டுவிட வேண்டும் என்று நிபுணர் குழு தனது பரிந்துரைகளை வழங்கி இருக்கின்றார்கள்.