Categories
தேசிய செய்திகள்

ஆண் கொரோனா நோயாளி… தொற்றுக்கு பயம் இல்லை…. ஆண் மருத்துவர் செய்த செயல்…!!

கொரோனா தொற்று நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவர் பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் வோக்ஹார்ட் மருத்துவமனையில்  ஏப்ரல் 30 அன்று 44 வயது கொரோனா தொற்று நோயாளி  ஐ.சி.யு தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நோக்கி வந்த மருத்துவர் ஒருவர் நோயாளியின் ஆடைகளை விலக்கி அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது கொரோனா நோயாளி, அலாரம் ஒலி எழுப்ப முற்பட அதை தடுத்த மருத்துவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் வெளியேறியப்பின் மற்ற மருத்துவமனை ஊழியர்களிடம் நோயாளி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையிடம் புகார் கொடுத்ததோடு அந்த மருத்துவரை பணிநீக்கம் செய்துள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில் “குற்றம்சாட்டப்பட்டவர் கொரோனா தொற்று நோயாளியுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முயற்சித்ததால் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதோடு, அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் வசிக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், குற்றம் செய்யப்பட்ட மருத்துவர் மீது நோயை பரப்ப முற்பட்டது, இயற்கைக்கு மாறாக நடந்து கொண்டது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |