Categories
மாநில செய்திகள்

உயிர் காக்க….. இது தான் ஒரே வழி….. மருத்துவர்கள் ஆலோசனை….!!

தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டதை  தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கில் பேருந்துகளுக்கு அனுமதி,இ பாஸ் நடைமுறை ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். எனவே மக்கள் முன்பை காட்டிலும், தற்போது அதிக சுதந்திரத்துடன் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்ப இருக்கிறார்கள். தளர்வுகளைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது  என்பதற்காக பல விழிப்புணர்வு அறிவுரைகளும், வாசகங்களும் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்,

முகக்கவசம் மூலம் 99.5 சதவீதம் தொற்று மற்றவருக்கு பரவாமலும், நம்மை அண்டாமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முக கவசத்தை உயிர் கவசமாக எண்ணி முறையாக அணிய வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வுகளில் பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் முறையாக அணிந்து கொள்வதே ஒரே தீர்வு என  கூறியுள்ளனர்.

Categories

Tech |