டாக்டர் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது.
இதனிடையே, இந்த படம் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் திரைப்படம் மாஸ்டர் படத்தின் வசூலை உண்மையிலேயே முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாஸ்டர் திரைப்படம் 4 லட்சத்து 50 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ள நிலையில், டாக்டர் திரைப்படம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர் தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.