சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரெடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனால் இப்படத்தை வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்து இருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக் குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அதில், “வரும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி டாக்டர் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. மேலும் அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களியுங்கள். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.