டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகையான பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் யோகிபாபு மற்றும் வினை போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சிவ கார்த்திகேயன் டாக்டர் படத்தின் அப்டேட்டை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக தெரிவித்ததோடு, அதன் இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு தனது நன்றிகளை கூறியிருக்கிறார்.