சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் ஜீ தமிழ் சாரா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் “டாக்டர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் இசையமைக்கிறார் அனிருத், படத்தில் கதாநாயகியாக கேங் லீடர் என்னும் தெலுங்கு படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியங்கா மோகன் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் யோகிபாபு வினை போன்றோர் முக்கிய வேடங்களில் நடிப்பினை வெளிக்காட்டி உள்ளனர். சிவகார்த்திகேயன் அவர்களது பிறந்த நாளன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் குழந்தை தொகுப்பாளியான சாரா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.