பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் பல் டாக்டர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஸ்வரன் கார்த்திகாவை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கார்த்திகா மருத்துவமனைக்கு வர மறுத்ததால் விக்னேஸ்வரன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.