ஹெச்.வினோத் இயக்கி தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் Glimpse காணொளி சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியானது.
இதுவும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூப் ட்ரெண்டிங் காணொளிகளில் தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.