கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 432 மருத்துவ ஊழியர்களை பணிநீக்கம் செய்து கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை மிகவும் திறம்பட கையாண்ட மாநிலமாக பலராலும் பாராட்டப்பட்ட கேரளாவில், தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. தினமும் புதுப்புது எண்ணிக்கையில் உச்சம் பெற்று இந்தியாவிலேயே தினசரி அதிக பாதிப்பு பெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா இருந்து வருகிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிராக வலுவான போராட்டங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா பேரிடர் காலங்களில் அங்கீகரிக்கப்படாத விடுமுறையில் மருத்துவ ஊழியர்கள் இருந்ததாக கூறி 432 மருத்துவ ஊழியர்களை கேரள அரசு பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட 432 ஊழியர்களில் 385 பேர் மருத்துவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.