தமிழகத்தில் நாளை மருத்துவர்கள் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து நடத்த இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க கூட்டமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டம் நடைபெற இருந்தது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க கோரிக்கையும் விடுத்து போராட்டம் நடைபெற இருந்த நிலையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு அறிவித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.