Categories
உலக செய்திகள்

மீன் சாப்பிட்ட பின் ஏற்பட்ட தொண்டை வலி… பரிசோதித்த மருத்துவர்கள்… இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஜப்பானில் தொண்டை வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணிடம் இருந்த சுமார் 3.8 செமீ அளவு கொண்ட ஒட்டுண்ணி புழுவை டாக்டர்கள் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தொண்ட வலி ஏற்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அப்போது டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்த போது, தொண்டைக்கு உள்ளே எதோ ஒரு புழு போன்ற ஒட்டுண்ணி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, டாக்டர்கள் உடனடியாக அதனை வெளியே எடுத்துள்ளனர். அப்போது அந்த புழு சாகாமல் உயிருடனேயே இருந்துள்ளது. சுமார் 3.8 செ.மீ நீளம் கொண்ட அந்த புழுவைக் கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.. அந்த புழு எப்படி வந்தது என்று கேட்டால், அவர் 5 நாட்களுக்கு முன்னர் சஷிமி (sashimi) என்ற உணவை சாப்பிட்டுள்ளார். அதாவது, சமைக்காமல் பச்சையாக சாஸுடன் மீன் பரிமாறப்படும்..

அதனை சாப்பிட்ட 5 நாட்களுக்கு பின்னரே அந்த பெண்ணுக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மீன் உள்ளே புழு உயிருடன் இருந்திருக்கலாம், அதை கவனிக்காமல் சாப்பிடும் போது அது அப்படியே தொண்டைக்குள்ளே சென்றிருக்கலாம் என்றுடாக்டர்கள் கூறியுள்ளனர்.. இதுக்குத்தான் அசைவ உணவை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்..

Categories

Tech |