Categories
உலக செய்திகள்

கொரோனா சிகிச்சை : ”மருத்துவர்கள் மீது தடியடி, கைது” பாகிஸ்தானில் கொடூரம் ..!!

கொரோனா சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணம் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய உலகையே மிரட்டி வரும் வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலக நாடுகள் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கான மருந்தை கண்டு பிடிக்காமல் திணறி வருகின்றனர். தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே போல பாகிஸ்தானைப் பொறுத்தவரை 3662 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நிலையில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 259 பேர் குணமடைந்து வீடு நிலையில் 17 பேர் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு உரிய உபகரணம் வழங்கவில்லை என்று போராட்டம் நடத்திய பாகிஸ்தான் மருத்துவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி, கைது செய்த சம்பவம் உலக நாட்டு மக்களிடையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது.தென்மேற்கு பாகிஸ்தான் நகரமான குவெட்டா மாகாணத்தில் கொரோனா வைரஸை பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததைக் கண்டித்து 50 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் பேரணியாக சென்று  முதலமைச்சர் ஜாம் கமல் கான் இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் முதல்வரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போது காவல்துறை தடியடி நடத்தியது கலைத்ததோடு மருத்துவர்களையும் கைது செய்தது. ஒவ்வொரு நாடும் மருத்துவர்களுக்கு உரிய உபகரணம் வழங்கி சிகிச்சை கொடுத்து வந்தாலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து அதிகமான மருத்துவர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் மருத்துவர்களை அடித்து, கைது செய்துள்ளது உலக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Categories

Tech |