தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே மாநில அரசாங்கம் பரிசோதனை கருவிகள் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்களுக்கு தேவையான உடைகள் போன்றவற்றை ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. அது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளில் உத்தரவுகளை பிறப்பித்து, கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம் அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றது.
இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவ, சுகாதாரப்பணியாளர்களை மேலும் இரண்டு மாத காலம் பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடுள்ளார். ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடுகிறார்.
மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை கிடைத்ததும் பணியில் சேரலாம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.