இலங்கையில் உயிர் காக்கக்கூடிய அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் மயக்க மருந்து, மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவர்களும், செவிலியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள், மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம் என்றும் இலங்கை மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.