தடுப்பு மருந்து போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் கம்பைநல்லூர் மற்றும் மொரப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா தொற்றிக்கான தடுப்பூசி இல்லாததால் தடுப்பு மருந்து போட இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.