தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. மத்திய மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் நடத்திய ஆலோசனை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
அதே போல தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர், குணமடைந்தோர்எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். 180 பேர் குணமடைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தது மக்களுக்கு நம்பிக்கையை பாய்ச்சும் வகையில் உள்ளது. நேற்று வரை 118ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 180 வரை உயர்ந்துள்ளது தமிழ்நாட்டின் மருத்துவர்களின் மகத்துவத்தை உணர வைக்கின்றது.