போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க IAS அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.இதில் மருத்துவர்கள் பிரதிநிதிகள் , தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி மருத்துவக்கல்வி இயக்குனர் , சுகாதார துறை இயக்குனர் பங்கேற்ற்றனர்.6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து , பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படுமென்று மருத்துவர் சங்க பிரதிநிதிகள் தெரிவிதனர். இதையடுத்து போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வது இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ்ஜை நியமனம் செய்துள்ளார். இவர் சுகாதார திட்ட பணிகள் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.