தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்திற்கு அருகே உள்ள உத்தமபுரத்தில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதர நிலையம் முன்பு முல்லை மாற்று திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், கடந்த வாரம் நடைபெற தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக பேசிய மருத்துவர்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமைதாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து செயலாளர் கருப்பையா, பொருளாளர் மணிகண்டன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.