கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அரசு, தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்களுக்கான செலவினங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது.
மேலும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்றிகர் அமித் சஹானி உள்ளிட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலமாக விசாரைணக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் (எஸ்.ஜி) துஷர் மேத்தா மத்திய அரசு தரப்பில் ஆஜராகி, கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக மருத்துவர்கள் செயலாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதிக்கபு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் தனியார் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஒவ்வொரு மாவட்டம்தோறும் தனிப்பட்ட முறையில் அறிவித்து கருத்துக்களை கேட்டு வருகிறோம் என அவர் வாதாடினார். இதனை கேட்ட நீதிபதிகள் ஏன் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து ஆலோசனைகளை பெறக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனியார் மருத்துவர்களுக்கு ஊதியம் என்பது பிடித்தம் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தார். அதனை கடுமையாக மறுத்த அரசு வழக்கறிஞர், கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தான் போராளிகள், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல, கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும், தனிநபர்களின் சோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கலாமே? எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.