இருப்பதா ? இறப்பதா ? என்பதே இங்கு பிரச்சனை. அமைதியாக இரு, நீ விரும்பியதை அடைவாய்.
இது புத்தருடைய வரிகள் இந்த வரிகள் தற்போதைய காலகட்டத்திற்கு அருமையாக பொருந்தி உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இது வைரஸின் சங்கிலித் தொடரை முற்றிலுமாக தடுத்து தொற்று நோய் பரவலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
ஆனால் இதை உணராமல் சிலர் வீட்டை விட்டு வெளியே சென்று வருகின்றனர். தற்போது அனைவரது எண்ணங்களிலும் ஓடக்கூடிய ஒரே சிந்தனை இருப்போமா அல்லது இறந்துவிடுவோமோ என்ற எண்ணம்தான். ஏனென்றால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அந்த அளவுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் சற்றும் இந்நோயால் நாம் தாக்கப்படுவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆகவே இனியாவது வீட்டிற்குள் அமைதியாக 21 நாட்கள் இருந்தால் கருணாவிடம் இருந்து தப்பிக்கலாம். நாம் விரும்பும் நேசிக்கும் உறவுகளுடன் இனி வரக்கூடிய வாழ்க்கையை ஆனந்தமாக கழிக்கலாம்.