சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள பல்வேறு சத்துக்களை குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.
1. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது .
2. நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.
3. தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும் ரத்த செல்கள் உருவாக உதவும்.
4. எலும்பு பற்களை உறுதிப்படுத்தும் வயதாவதை தாமதப்படுத்தும் பளபளக்கும் சருமத்தை கொடுக்கும் .
5. உடல் எடை கூடும் சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிட வேண்டும்.
6. சர்க்கரை வள்ளி கிழங்கில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது.
7. கிழங்கை விட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம் ஆகியவை அடங்கியுள்ளது.