Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய கொடி ஏற்றினால் மட்டும் தேசப்பற்று வளர்ந்துவிடுமா.. வைரமுத்து பேச்சால் சர்ச்சை..!

செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டம். தேசிய அக்கரைக்கு வழி வகுக்கக்கூடிய நல்ல திட்டம் தான். ஆனால் தேசிய கொடியை சுதந்திர தின நாளில் மட்டும் ஏற்றுவது தான் சிறந்தது என்று நாடு கருதி விட முடியாது. ஆகஸ்ட் 15 அன்றும், குடியரசு திருநாளான ஜனவரி 26 அன்று மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்துவிட்டால், தேசத்தின் சிறந்த குடிமகனாக ஆகிவிட மாட்டோம்.

365 நாளும் நான் தேசத்தின் உடைய குடிமகன் என்ற அக்கறையை மக்கள் மனதில் எழுப்புவது தான் இந்த தேசத்தின் உடைய முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம்.இந்த நேரத்தில் ஒரு முக்கியமான செய்தி தேசியக்கொடியை இல்லந்தோறும் ஏற்றுவது என்பது மக்களின் பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. மக்களின் கல்வியோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. மக்களின் தேசிய அக்கறையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

140 கோடி மக்களின் பொருளாதாரத்தையும், கல்வியையும், சமூக அக்கறையையும் இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமலே, ஒவ்வொரு இந்திய குடிமகனும் எல்லா நாளும் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவான் என தெரிவித்தார். வைரமுத்துவின் இந்த கருத்து, தேசிய கொடி ஏற்றினால் மட்டும் தேசப்பற்று வளர்ந்துவிடுமா என்று கேளிவி எழுப்புவது போல சர்சையாக இருக்கின்றது என பாஜக ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.

Categories

Tech |