ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பெரியார் குறித்து ரஜினியின் பேச்சு ஆகியவை குறித்து மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது, விவாதத்தை கிளப்பியுள்ளது. மிக சிறுவயதிலேயே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தவறான அணுகுமுறை எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர். அதேபோல், சேலத்தில் 1971ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் திராவிடக் கழகத்தினர் நடத்திய ஊர்வலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து குறித்தும் பல்வேறு அரசியல் தரப்பிலும் விவாதிக்கப்பட்டுவருகிறது.
பிரபல மனநல மருத்துவரான ருத்ரன் இந்த இரு நிகழ்வுகள் குறித்து முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அடுத்த தலைமுறையினரின் கல்வி ஒரு பெரும் சிக்கலில் இருக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எத்தனை குழந்தைகளையும், அவர்களின் பெற்றோர்களையும் பாதிக்கப்போகிறது என்பது, கடந்த மூன்று நாள்களில் ஏழு தாய்மார்கள் தங்கள் குழந்தை ஐந்தாம் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை என்று என்னிடம் அழைத்து வந்ததில் தெரிகிறது.
https://www.facebook.com/doctor.rudhran/posts/10220542792897329