செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே. சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து, அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார்.
ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை அழைக்கின்றார்களோ, அவர் முதல்வராக வர முடியும்.அதே போல தான் சட்டமன்றத்திற்குள் நடப்பது வேறு, வெளியில் நடைபெறுவது வேறு. வெளியே கட்சி சார்பா நடைபெறுகின்ற பதவி வேறு, அதை உள்ளே புகுத்துவது ஏற்புடையது அல்ல. விதிகளுக்கு புறம்பானது, மரபுக்கு புறம்பானது.
சட்டமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்றைக்கு 62 பேர் உறுப்பினராக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த 62 பேரும் இன்றைக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் சட்டமன்ற துணைத் தலைவர் திரு உதயகுமார். திரு. கிருஷ்ணமூர்த்தி துணை செயலாளர். இதை ஏற்க மறுக்கிறார். ஏதேதோ காரணத்தைச் சுட்டிக்காட்டி, நாங்கள் கொடுத்த கோரிக்கையை நிராகரிக்கிறார். அதை வலியுறுத்தி சட்டமன்றத்திலே நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் அவர் ஏற்க மறுக்கின்றார்.
அன்றைய தினம் அது பொருந்தும். இன்றைய தினம் என்ன நிலைமை. அதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம் அல்லவா? அதைத்தான் இந்த புக்லெட்டில் போட்டு கொடுத்திருக்கிறோம். இதை சட்டமன்ற தலைவர் படிக்க மாட்டாரா ? அவர் ஆசிரியர் தானே ? எப்படி சட்டமன்றத்தை வழிநடத்த முடியும். சட்டத்தை மதிக்க வேண்டும் அல்லவா ? நீதிமன்ற தீர்ப்பை சட்டமன்ற பேரவை தலைவரே மதிக்கவில்லை என்றால், எப்படி சாதாரண மக்கள் மதிப்பார்கள். ஆகவே தான் நாங்கள் விளக்கமாக, சட்டப்பேரவை தலைவர் இடத்திலே நீதிமன்ற தீர்ப்பு, சட்டமன்ற விதிகள், சட்டமன்ற மரபு மாண்பை காப்பாற்ற வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தோம், அதை நிராகரித்து விட்டார் என தெரிவித்தார்.