Categories
அரசியல் மாநில செய்திகள்

காவி உடையா ? கொதித்தெழுவார்கள்….. பதிலடி கொடுப்பார்கள்…. வைகோ ஆவேசம் …!!

திருவள்ளுவர் குறித்து பாஜக பதிவிட்டுள்ள கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இதற்க்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில் , திருக்குறளை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கண்டனம் தெரிவித்த வைகோ போக்குவரத்து விதிமீறல் அபராத ரசீது விவரங்கள் ஆங்கிலம், இந்தியில் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று வைகோ தெரிவித்தார்.

Categories

Tech |