வடகொரியாவில் உணவு பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அந்நாட்டு அதிபர் எடுத்த திடீர் முடிவு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றவர்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர். இவரது பல செயல்முறைகள் விசித்திரமான செயல்முறையாகத்தான் இருக்கும். ஆனாலும் வடகொரிய தற்போது வரை ஒரு மர்மமான தேசமாகவே பார்க்கப்படுகிறது. இன்றுவரை வடகொரியா குறித்த பல உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அந்த அளவிற்கு,
தன்னுடைய நாட்டை அந்நாட்டின் அதிபர் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் தற்போது கடுமையான உணவுப் பஞ்சம் வடகொரியா நாட்டில் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியது. இந்த பிரச்சனையை போக்குவதற்காக, மக்களின் துயரைப் போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாயை மாமிச நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய்களை மாமிசமாக மாற்றி மக்களிடையே அவர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப் போகிறாரா? என்ற பீதியில் அந்நாட்டு மக்கள் உள்ளனர். இதனால் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.