அமெரிக்காவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் மாட்டிய நாய் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் Douglas county என்ற பகுதியில் இருக்கும் ஒரு சாலையில் நின்ற வாகனத்திலிருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்த வாகனத்திலிருந்த நபர் இறங்கிவிட்டார்.
ஆனால், அவரின் செல்லப்பிராணி வாகனத்திற்குள் மாட்டிக்கொண்டது. எனவே, தன் செல்லப்பிராணியை காப்பாற்றுமாறு அவர் அலறிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒரு நபர் கண்ணாடிகளை தடியால் அடித்து உடைத்து நாயை பாதுகாப்பாக மீட்டு அருகே இருந்த பனிக்கட்டியில் வைத்து காப்பாற்றியுள்ளார்.