பிரபல இசையமைப்பாளர் வளர்க்கும் நாய், அவர் இசைக்கு ஏற்ப கொரோனா பாடல் பாடி அனைவரையும் அசத்தி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி பலியானோர் எண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்து சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஒரு கொரோனா பாடல் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், அந்தப்பாடலை அவர் இசையமைப்பதற்கு ஏற்றார் போல் அவர் வளர்க்கும் நாய் பாடியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
https://www.instagram.com/tv/B-voySZjLn4/?utm_source=ig_web_copy_link