குழந்தைகள் சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் நாய் படுத்து தூங்கும் வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சித்ரதுர்கா மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள படுக்கையில் தெருநாய் தூங்கி உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஏழை மக்கள் வந்தால் டாக்டர்கள் படுக்கை இல்லை எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
ஆனால் இப்போது குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கையில் தெருநாய் ஓன்று படுத்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த நாய் படுத்துள்ள வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனைப் பார்த்தவர்கள் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பணியில் அலட்சியமாக இருந்த குற்றத்திற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.