கொத்து தோசை
தேவையான பொருட்கள் :
தோசை மாவு – 1 கப்
முட்டை – 4
வெங்காயம் – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் முட்டையுடன் , சிறிதளவு உப்பு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும் . தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தோசையின் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும்.
வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடாயில் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் . வெங்காயம் வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கி
கடைசியாக மிளகு சீரகப் பொடி, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கினால் சூப்பரான கொத்து தோசை தயார் !!!